இந்தோனேசியா பலி 2010ஆக உயர்வு; 5000க்கும் மேற்பட்டோர் மாயம்

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 06:37 pm

indonesia-earthquake-toll-rises-to-2010

இந்தோனேசியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் பலியானோர் எண்ணிக்கை 2010 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் 28ம் தேதி, இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 7.5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுலாவெசி தீவை சுனாமி தாக்கியது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது 2010 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

சுலாவெசி பகுதியின் தலைநகர் பலு தீவில் மட்டும் சுமார் 1601 பேர் பலியாகியுள்ளதாக, இந்தோனேசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ நுக்ரோகோ தெரிவித்துளளார். 10,679 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 2,549 பேர் படுகாயமடைந்துளளதாகவும் அவர் கூறினார். 

அதிகாரப்பூர்வமாக 671 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டாலும், சுமார் 5000 பேர் காணாமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக பெடோபோ என்ற தீவில், நிலநடுக்கத்தால் மண் தளர்ந்து கட்டிட்டங்கள் வீடுகள் பூமிக்குள் சென்றன. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் மாயமானதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

newstm.in
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close