• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அமைக்கப்பட்ட ட்ரம்ப் சிலை

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Oct, 2018 04:51 am

you-or-your-dog-can-now-pee-all-over-trump-thanks-to-these-statues

அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் உருவ சிலை சாலையில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு ட்ரம்ப் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில் "என்மீது சிறுநீர் கழிக்கவும்" என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பது பாதசாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.  ட்ரம்ப் ஒரு சிறந்த அதிபராக செயல்படவில்லை, அந்த ஆத்திரத்தில்தான் இப்படி ஒரு சிலையை வடிவமைத்து சாலையின் நடுவே வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட்டதை எதிர்த்து பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் ட்ரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடதக்கது. 

Nwewstm.in 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close