ஃபேஸ்புக் தலைவர் மார்க் பதவிக்கு ஆபத்து!

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 10:50 am
investors-bid-to-remove-mark-as-facebook-chairman

பயனாளர்களின் தகவல் திருடப்படுவது குறித்து தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஷூகெர்பெர்க்கை நீக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் தனி முதலீட்டாளர்கள் மட்டுமன்றி அமெரிக்க மாகாண அரசுகளின் கருவூலங்கள் சார்பிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முதலீடு செய்திருக்கும் இலினோயிஸ், ரோடே ஐஸ்லாண்ட், பென்னிவானியா, நியூயார்க் நகரம் ஆகிய நான்கு மாகாண அரசு முதலீட்டாளர்கள், மார்க்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளனர். அந்த பரிந்துரை குறித்து அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களின் வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

தலைவர் பதவியில் இருந்து மார்க்கை நீக்கும் பட்சத்தில், நிறுவனத்தை நிர்வகிக்க தன்னாட்சி அதிகாரம் பொருந்திய நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் நிபந்தனையாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டிலும் இதேபோன்ற பரிந்துரை முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது. அதற்கு 3 மாகாண அரசு முதலீட்டாளர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், அந்தப் பரிந்துரை தோற்கடிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவது, போலியான செய்திகள் பகிரப்படுவது, அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்ய அனுமதித்தது போன்ற காரணங்களால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நம்பகத்தன்மை சர்வதேச அளவில் கேள்விக்குறியாகிவுள்ள நிலையில், மார்க்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close