போப்பாண்டவருக்கு வட கொரியா அழைப்பு - வரலாற்று சிறப்புமிக்க திருப்பம்

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 02:15 pm
north-korea-invites-pope-to-their-country-a-historical-move

வடகொரியாவுக்கு வருமாறு, கத்தோலிக திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த விருப்பத்தை தென் கொரிய அதிபர் போப்பிடம் தெரிவித்தார். இதுகுறித்து பரிசீலிப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

மத கட்டுப்பாடுகளுக்கு பெயர் போனது வடகொரியா. அந்நாட்டின் பாரம்பரிய மதங்களான ஷாமானிஸம், சோண்டாயிஸம் ஆகியவை பெரும்பான்மை மதங்களாக உள்ளன. கிறிஸ்தவம், பௌத்தம், முஸ்லிம் உள்ளிட்டவை சிறுபான்மை மதங்களாகும். வடகொரிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களை தவிர்த்து, வேறு எந்த இடங்களிலும் கிறிஸ்தவ மத நடவடிக்கைகளுக்கு அங்கு அனுமதி கிடையாது.

இந்தச் சூழலில், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், போப் பிரான்சிஸை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி சந்திக்கும்போது வட கொரியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்குமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், மூன் ஜே-இன்னிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நேற்று போப்பை சந்தித்த தென் கொரிய அதிபர், வட கொரியாவின் அழைப்பு குறித்து தெரிவித்தார்.

இதுகுறித்து தென் கொரிய அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா என்று மூன் ஜே-இன் கேட்டதற்கு, நீங்கள் தெரிவித்த செய்தியே போதுமானது. எனினும், கிம் ஜாங் உன் முறைப்படி அழைப்பு விடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதன்படி அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயம் அதற்கு பதில் அளிப்பேன். அந்நாட்டுக்கும் செல்வேன் என போப் பிரான்சிஸ் கூறினார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close