தைவானில் ரயில் தடம் புரண்டு 18 பேர் உயிரிழப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Oct, 2018 07:36 pm
taiwan-train-derailment-in-yilan-county-kills-at-least-18

தைவானில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 168 பேர் படுகாயமடைந்தனர். 

தைவானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இலன் கவுண்டியில் இருந்து டாய்டங்க் நகருக்கு சென்ற புயுமா என்ற விரைவு ரயில் சின்மா ரயில் நிலையத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதியில் இருந்த 8 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, தண்டவாளத்தில் இருந்து நிலைதடுமாறி தரம்புரண்டது. இந்த விபத்துத்தொடர்பான காட்சிகள் சின்மா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த ரயில் 366 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 168 பேர் படுகாயமுற்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மீட்பு படையினர் ரயிலின் இடிபாடிகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்துள்ளவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ரயில் விபத்துக்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் தைவான் நாட்டு அதிபர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த ரயில் விபத்துக்கான விசாரணை முடுக்கிவிடப்படும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close