இந்தோனேஷியா: 188 பேருடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 10:12 am
indonesia-lion-air-flight-crashes-en-route-from-jakarta-to-pangkal-pinang

ஜகார்தாவில் இருந்து இன்று காலை பங்க்கால் பினாங் தீவுகள் சென்ற விமானம் 13 நிமிடத்தில் மாயமான நிலையில், அது கடலில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம்,  புறப்பட்ட 13வது நிமிடத்தில்  விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

மாயமான விமானம், ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம் என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

பின்னர் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் என 188 பேர் பயணித்துள்ளதாக இந்தோனேஷிய அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்கள் நிலை குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close