நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்: ஆய்வில் தகவல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Oct, 2018 06:47 pm
dogs-trained-to-detect-malaria-victim

நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். மலேரியா கொசுக்களால் பரவும் நோய். இதுவரை மலேரியா தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா இருப்பதை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் சோதனை முயற்சியாக நாய்களிடம் மனிதர்களின் சாக்ஸ் அளிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த சாக்ஸை மோப்பம் பிடித்த நாய்கள், சாக்ஸின் உரிமையாளருக்கு மலேரியா உள்ளாதா? இல்லையா? என்பதை கூறிவிடும் என ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளார். இந்த ஆய்வில் 70 சதவீதம் நோய்குரியவர்களை நாய்கள் துல்லியமாக கண்டுப்பிடித்தன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் பரிசோதனை செய்யாமல் நாய்களின் உதவியால் கண்டுபிடிக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close