ஆப்கானிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 26 உயரதிகாரிகள் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 07:43 pm
helicopter-crash-in-afghanistan-26-dead

ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 25 பேர் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இருந்து ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் 25 ராணுவ உயரதிகாரிகள் , ராணுவ ஹெலிகாப்டரில் இன்று சென்று கொண்டிருந்தனர்.
இரு மாகாணங்களுக்கும் இடையே அனார் டாரா மாவட்ட மலைப்பகுதி வழியாக ஹெலிகாப்டர் சென்றபோது இன்று காலை சுமார் 9 மணியளவில் (உள்ளூர் நேரம்) மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் 25 ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close