பெரும்பான்மையை நிரூபிக்காமல் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது - கரு ஜெயசூர்யா

  பாரதி கவி   | Last Modified : 05 Nov, 2018 05:52 pm
can-accept-rajapaksa-only-if-he-wins-floor-test-ex-speaker-jayasurya

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காத வரையில், ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். முன்னதாக, தினேஷ் குணவர்த்தனா என்பவரை புதிய சபாநாயகராக ராஜபக்சே நியமித்ததை தொடர்ந்து, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால், கரு ஜெயசூர்யா தனது பதவியை ராஜிநாமா செய்யாத நிலையில், புதிய சபாநாயகர் பதவியேற்றிருப்பதால் உண்மையில் யார் சபாநாயகர் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறீசேனா பதவிநீக்கம் செய்ததுடன், நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்று கரு ஜெயசூர்யா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சிறீசேனா மேற்கொண்ட நடவடிக்கை அரசியல்சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி பெரும்பான்மையான எம்.பி.க்கள் தன்னிடம் மனு அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காத வரையில் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என்றும் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close