பெரு: பயணிகள் பேருந்து-லாரி மோதல்; 18 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 07:43 am
peru-bus-lorry-accident-18-dead

பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய நேரிட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரோ வந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, 12 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close