வெடி வெடித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை?

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 10:21 am
singapore-2-indians-facing-trial-for-lighting-firecracks

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வெடி வெடித்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், சிங்கப்பூர் சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கவும், ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.5.25 லட்சம் வரையில் அபராதம் விதிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

கைது செய்யப்பட்ட தியாகு செல்வராஜு(29) மற்றும் சிவகுமார் சுப்பிரமணியன்(48) ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், சிங்கப்பூர் ஊடகமான தி ஸ்டிரெய்ட் டைம்ஸ் தெரிவிக்கிறது. ஆனால், இவர்கள் இருவரும் தமிழர்களா என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை தெரியவில்லை.

சிங்கப்பூர் விதிகளின்படி, அதிகாரிகளிடம் முன்அனுமதியின்றி வெடி வெடிப்பது சட்டவிரோதமாகும். இந்நிலையில், இந்தியர்கள் அதிகம் கூடும் இடமான லிட்டில் இந்தியா பகுதியில், சாலையின் குறுக்குச்சுவர் மீது அவர்கள் வெடி வெடித்துள்ளனர். முதலில் சிவகுமார் வெடிப்பெட்டியை பிரித்து வைப்பதும், பின்னர் தியாகு அதை பற்ற வைப்பதுமான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்திருக்கின்றனர். முன்னதாக, இந்த விடியோ காட்சியை, சிங்கப்பூர் சாலை கண்காணிப்பு குழுவினர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close