வங்கதேச நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 12:11 pm
bangladesh-general-elections-to-be-held-on-dec-23

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டுத் தலைமைத் தேர்தல் ஆணையர் நூருல் ஹூடா இதனை அறிவித்தார். முதல்முறையாக, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் 4 ஆணையர்களுடனும், நூருல் ஹூடா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், தேர்தலுக்கான அறிவிப்பை, அரசுத் தொலைக்காட்சி மூலமாக அவர் வெளியிட்டார். நவம்பர் 9 முதல் 19ம் தேதி வரையில் வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 22ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே தேர்தல் தேதி தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம் என்று ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியாகக் கருதப்படும் தேசிய ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் மொத்தம் 10 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் ஏறக்குறைய சரி பாதி வாக்காளர்கள் பெண்கள் ஆவர். மொத்தம் 300 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில், 40,199 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. தேர்தல் நடத்துவதற்கான பொருள்களை வாங்குவது, தேர்தல் ஆவணங்களை அச்சிடுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். குறைந்தபட்சம் 100 தொகுதிகளில் முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்குப்பதிவின் தரம் உயரும் என்றும், நேரம், பணம் உள்ளிட்டவை சேமிப்பாகும் என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close