கசோகி கொல்லப்பட்டபோது பதிவான குரல் பதிவுகளை பல நாடுகளுக்கு பகிர்ந்துள்ளோம்- துருக்கி அதிபர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 07:25 pm
jamal-khashoggi-murder-turkey-shared-khashoggi-tapes-with-saudi-us

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டபோது பதிவானதாகக் கருதப்படும் குரல் பதிவுகள் அடங்கிய டேப்களை அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பகிர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கசோகி. இவர் அக்டோபர் 2 ம் தேதி துருக்கி நாட்டு காதலி ஜெங்கிஸை திருமணம் செய்வதற்காக தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார். அவரை துருக்கி தூதர அதிகாரிகள் கொலை செய்ததாக சவுதி அரசு செய்தி வெளியிட்டது. இந்த சம்பவத்திற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கசோகி மரணத்திற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், பிரான்சில் நடைபெறும் முதலாம் உலகப் போரின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகன், கசோகி கொல்லப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோ டேப்பை ஏற்கெனவே அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் பகிர்ந்துள்ளதாக கூறினார். ஃபிரான்சில் டிரம்புடனான சந்திப்பின் போது அதுகுறித்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close