பிரேசிலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Nov, 2018 05:37 pm
brazil-mudslide-in-rio-de-janeiro-state-kills-10

பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையை அடுத்து மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரியோ டி ஜெனீரோ நகரத்தில் உள்ள மலை பகுதியில் அடிக்கடி மண் சரிவு நிகழ்வது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை நிட்ரோய்  என்ற பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள 3 கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் அப்பகுதியில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 10 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான மேலும் 4 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மேலும், மலைப்பாங்கான அந்த பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஏராளமான வீடுகள் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் மழை தொடர்ந்து பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close