மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் முன் விழுந்த பெண்கள்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Nov, 2018 07:30 pm
topless-female-protester-runs-at-trump-s-motorcade-in-paris

உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் முன் இரு பெண்கள் மேலாடை இல்லாமல் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் 270 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டார். அப்போது அவர் சென்ற காரின் முன் இரண்டு பெண்கள் அரை நிர்வாணமாக சென்று விழுந்து ட்ரம்பை எதிர்த்து கோஷமிட்டனர். ஆனால் ட்ரம்பின் கார் அதனை பொருட்படுத்தாமல் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் விழுந்த பெண்களை கைது செய்தனர். கைதான பெண்கள் டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளம் மூலம் நடைபெற்ற ‘ஃபெமென்’ இயக்கத்தின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close