ஜன்னல் சீட்டு வேண்டுமா? விமான பணி பெண் செய்த சாதுர்ய காரியம்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Nov, 2018 06:55 pm
flight-attendant-s-clever-response-to-passenger-who-kept-complaining-about-window-seat-is-a-win

ஜப்பான் விமானத்தில் ஜன்னலோர இருக்கை கேட்டு அடம்பிடித்த பயணிக்கு விமானப் பணிப்பெண் வெள்ளைக் காகிதத்தில் ஜன்னலை வரைந்து கொடுத்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பான் விமானம் ஒன்றில் ஜன்னலோர இருக்கை கேட்டு பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேறு இருக்கை இல்லை என எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த விமானப் பணிப்பெண் பெரிதும் முயற்சித்தார். ஆனால் பயணி சற்றும் தன்போக்கை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை. செய்வதறியாது திகைத்து நின்ற அந்த விமான பெண் சிறிது நேரம் யோசிக்க தொடங்கினார். விமான ஜன்னல், கடல் மேகங்கள் ஆகியவற்றை சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போல ஒரு காகிதத்தில் வரைந்து அதனை பயணிக்கு அருகே ஒட்டி வைத்தார். ஜன்னல் சீட்டு தானே கேட்டிங்க... இந்தாங்க... எனக்கூற அதை பார்த்துவிட்டு பயணி தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தார். பயணி தன் வலியுறுத்தலை கைவிட்டு சமாதானமானார். விமானப் பணிப்பெண் வரைந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close