மாப்பிள்ளைக்கு 10... பொன்னுக்கு 8... கலாட்டா கல்யாணம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Nov, 2018 08:02 pm
child-marriage-in-egypt-reaches

உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், ருமேனியாவில் நடந்த குழந்தைகளுக்கு இடையேயான திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ருமேனியாவில் உள்ள கிரையோவா என்ற இடத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும், 8 வயது பெண் குழந்தைக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் மற்றும் மணமகனாக முழு அலங்காரத்தில் இருந்த இருகுழந்தைகளும் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திகைத்து நின்றனர். அப்போது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையிடம் பொம்மை பறிக்கப்பட்டு கையில் தாலியை கொடுத்து அந்த சிறுமிக்கு கட்ட சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பாடகர் அலெக்ஸ் என்பவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். குழந்தைகள் திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்களை கைது செய்ய கிரையோவா நகர போலீசார் முடிவு செய்துள்ளனர். இது சம்பிரதாயங்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி மட்டுமே எனவும் குழந்தைகள் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரே இருவருக்கும் திருமணம் செய்துவைக்கப்படும் எனவும் குழந்தைகளின் பெற்றோர்கள் விளக்கமளித்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close