காபூலில் தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 12:43 pm
at-least-10-killed-as-explosion-hits-security-compound-in-kabul

காபூலில் பாதுகாப்பு காம்பவுண்ட் மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் திஸ்பிசாரி பகுதியில் பல அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கு நேற்று மாலை குண்டு வெடித்தது. இதில் பத்து பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆப்கானின் பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வஹிதுல்லா மஜ்ரோஹ் தெரிவித்துள்ளார். 

முதல் கட்ட விசாரணையில் ஜி4எஸ் முகாமில் இருந்த காரில் தான் குண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது. ஜி4எஸ் என்பது பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமாகும். அந்த பகுதியில் வெளிநாட்டவர் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close