சிறிய மனிதர்களுக்கு பெரிய பதவி! ஐயோ நான் மோடிய சொல்லவில்லை: இம்ரான்கான்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 07:56 pm
imran-khan-tweet-about-modi

சிறிய மனிதர்கள், பெரிய பதவிகளை ஆக்கிரமித்து இருப்பதாக தாம் பதிவிட்ட கருத்து, நரேந்திர மோடியை சுட்டிக் காட்டி அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளக்கம் அளித்துள்ளார். 

பாகிஸ்தான் -இந்தியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. மேலும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு இந்தியா சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாகிஸ்தான் அரசு பணப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். ஆனால் பாகிஸ்தானின் பேச்சுவார்த்தையை இந்தியா புறக்கணித்தது.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகப்பெரிய பதவிகளை மிகசிறிய மனிதர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர்” என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்தானது பிரதமர் நரேந்திரமோடியை சுட்டிக் காட்டித்தான் பதிவிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தாம் நரேந்திர மோடியை சுட்டிக் காட்டி இதுபோன்று பதிவிடவில்லை என இம்ரான்கான் விளக்கமளித்துள்ளார்.

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close