உக்ரைன் நாட்டுடனான போர் தொடரும் - ரஷ்ய அதிபர் புதின்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:05 pm
the-war-with-ukraine-will-continue-russian-president

உக்ரைன் நாட்டில் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும் வரை இருநாடுகளுக்கும் இடையேயான போர் தொடரும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியது. மேலும், ரஷ்யாவை சேர்ந்த 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷ்யா தெரிவித்தது. 

இந்நிலையில், அர்ஜென்டினா தலைநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விளாடிமிர் புதின், 'ரஷியா-உக்ரைன் இடையிலான பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அந்நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடரும்’ என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close