சொர்கத்திலிருக்கும் தந்தைக்கு கடிதம் எழுதிய சிறுவன்: டெலிவர் செய்த தபால்காரர்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 02:50 pm
a-7-year-old-boy-wrote-a-letter-to-his-father-in-heaven-and-the-post-office-delivered

லண்டனை சேர்ந்த ஜெஸ் என்ற 7 வயது சிறுவன் தான் எழுதிய கடிதத்தை சொர்கத்தில் இருக்கும் தனது தந்தைக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதை ராயல் மெயில் நிறைவேற்றி உள்ளது. 

லண்டனை சேர்ந்தவர் தெரி காப்லாண்ட். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஜெஸ் எனும் 7 வயது மகன் இருக்கிறார். தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி ஜெஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் சொர்கத்தில் இருக்கும் எனது தந்தைக்கு இதனை அனுப்பி விடுங்கள் என்று எழுதி தபால் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். 

இதனையடுத்து அந்த கடிதம் பத்திரமாக அனுப்பப்பட்டு விட்டதாக தபால் துறையிடம் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெரி காப்லாண்ட் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "சில வாரங்களுக்கு முன்பு எனது மகன் இந்த கடிதத்தை அனுப்பினான். அதற்கு தற்போது அழகான ரிப்ளை வந்துள்ளது. தான் அனுப்பிய கடிதம் தந்தையிடம் சென்றுவிட்டது என்பதை அறிந்த பிறகு அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து என்னால் விளக்க முடியில்லை" என தெரிவித்துள்ளார். 

மேலும் இரண்டு கடிதங்களின் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். 

லண்டனின் ராயல் மெயிலில் பணிப்புரியும் ஷான் என்பவர் அந்த சிறுவனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "நட்சத்திரங்களையும், விண்வெளியில் இருந்த மற்றவைகளையும் தாண்டி இந்த கடிதத்தை கொண்டுசெல்வது மிக சவாலான ஒன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் பத்திரமாக இதனை டெலிவர் செய்து விட்டோம்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த கடிதத்தை அனுப்பிதற்காக ஷானுக்கு ராயல் மெயிலின் தலைமை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close