மற்றொரு சமூக வலைதளத்தில் 10 கோடி பேரின் தகவல் திருட்டு!

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 08:57 pm
quora-hack-100-million-user-data-stolen

பிரபல கேள்வி - பதில் சமூக வலைத்தளமான கோராவின் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள 10 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள பயன்படுத்தி வந்த பிரபல கோரா இணையதளம், உலகம் முழுவதும் சுமார் 30 கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஆடம் டி ஆஞ்சலோ, 2009ம் ஆண்டு கோரா சமூக வலைத்தளத்தை துவக்கினார். 

மிகவும் பிரபலமான இந்த சமூக வலைதளத்தின் சர்வர்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது. இதனால், 10 கோடி வாடிக்கையாளர்களின் ஈமெயில் ஐடி, பாஸ்வோர்டு, அவர்கள் கேட்ட கேள்விகள், அளித்த பதில்கள், பார்த்த பக்கங்கள், என பல தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. 

தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை நவம்பர் 30ம் தேதி கோரா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தங்களது இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து விசாரித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 

இந்த ஹேக் சம்பவம் குறித்து, கோரா தலைவர் ஆடம் டி ஆஞ்சலோ வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close