கலவரங்களை தொடர்ந்து பிரான்ஸ் வரி விதிப்பு பின்வாங்கல்!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 12:44 am
french-fuel-tax-suspended-after-heavy-protest

பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்ததை தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவை ஒத்திவைப்பதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களின் பயன்பாட்டை குறைக்க உலகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில், இயற்கைக்கு கேடு விளைவிக்காத புதிய எரிவாயுக்கள் மீது முதலீடு செய்வதற்காக, பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.

அடுத்த மாதம் முதல் இந்த வரி உத்தரவு அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறி கலவரங்கள் நடைபெற்றன. பொதுச் சொத்துக்கள் அதிகமாக சேதமடைய, இதுவரை கலவரங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவை ஒத்திவைப்பதாக அந்நாட்டின் பிரதமர் எடுவார்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரதமர் பிலிப் முயற்சித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர இருந்தவர்கள், தங்களிடையே உள்ள தீவிர எதிர்ப்பாளர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close