உலக அழகியானார் மெக்சிகோவின் வனெஸா போன்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 09:14 pm
mexico-s-vanessa-ponce-crowned-miss-world

மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன், 2018ன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனுஷி சில்லர், வனெஸாவுக்கு கிரீடம் சூட்டினார்.

2018ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி, சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2018ம் ஆண்டின் உலக அழகியாக, மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 வயதான வனெஸா, மெக்சிகோ நாட்டை சேர்ந்த முதல் உலக அழகி என்ற பெருமையை பெற்றுள்ளார். வனெஸாவுக்கு, 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர், கிரீடம் சூட்டினார். 

அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில், 20 வயதான மிஸ் தாய்லாந்து நிக்கோலின் பிச்சபாவும், 3வது இடத்தில், மிஸ் ஜமைக்கா கடிஜா ரிச்சர்ட்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த மிஸ் இந்தியா அனுக்ரீதி வாஸ், இறுதி 12 பேர் பட்டியலில் தேர்வாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close