‘மீடு’ வில் விமான பணிப் பெண் ஆதங்கம்

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 09:25 am
the-flight-attendant-is-report-in-metoo

விமானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். 

‘மீடு’ என்ற இயக்கதின் மூலம் பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், சினிமா துறை தொடங்கி அனைத்து துறை பெண்களும் பணியிடங்களில் உயர் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து தெரியப்படுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், வானத்திலும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் புதிதாக முதல் நாள் பணியில் சேர்ந்த அன்று விமானி ஒருவர் தவறான முறையில் தன்னை தொட்டு தூக்கியதாகவும் கூறியுள்ளார். அந்த தருணத்தில் கடும் கோபம் வந்தது. ஆனால் அதை விட பயமும், பதற்றமும் அதிகம் இருந்ததோடு தான் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டதாகவும், அதில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகளை எப்படி எதிர்கொள்வது என விமான பணிப் பெண்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close