102 வயதில் வானில் பறந்த பாட்டி: உலகிலேயே வயதான ஸ்கை டைவர்!

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 12:22 pm
fearless-102-year-old-woman-just-became-the-world-s-oldest-skydiver

பறப்பதற்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 102 வயதான பாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமையை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

சிட்னியை சேர்ந்தவர் ஜுங்கி ஐரீன் என்ற அந்த மூதாட்டி. இவருக்கு 102 வயதாகிறது. இவர் சமீபத்தில் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் மணிக்கு 220 கீ.மீ வேகத்தில் பறந்த போதும், தான் இயல்பாகவே உணர்ந்ததாக கூறினார்.

ஏற்கனவே 2016ம் ஆண்டு தனது 100 வைத்து பிறந்தநாளின் போது வெற்றிகரமாக ஸ்கை டைவிங் செய்து மிரட்டியுள்ளார் .எனினும் 102 வயதில் திரும்ப இதை நிகழ்த்தி காட்டியது வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்று இந்த விழாவை ஒழுங்கு செய்தவர்கள் கூறியுள்ளனர்.

வானிலை சீராக இருந்த போதிலும், மேலே அதிக குளிராக இருந்ததாக ஜுங்கி கூறியுள்ளார். தன் மகளை பறிகொடுத்த 'மோட்டார் நியூரோன்' என்ற வியாதிக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close