சீனா, பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்கா!

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 02:39 pm
china-and-pakisthan-in-america-s-blacklist

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மத சுதந்திரத்தின் பெயரில் அத்துமீறல்கள் நடைபெறுவதாகக் கூறி, இந்நாடுகளின் பெயரை அமெரிக்கா தமது கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் வகையிலும், இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுவோரை தண்டிக்கும் விதத்திலும், சர்வதேச மதச் சுதந்திர சட்டம், 1998-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. உலக நாடுகளில் உள்ள தனிமனிதர்களின் மதச் சுதந்திரத்தை இச்சட்டம் உறுதி செய்கிறது.

இருப்பினும், சர்வதேச அளவில் மதச் சுதந்திரத்தின் பெயரில் வன்முறைகள், அத்துமீறல்கள் அவ்வப்போது நடைபெற்று கொண்டுதான் உள்ளன.

இதனை காரணங்காட்டி, சீனா, வடகொரியா, பாகிஸ்தான், சூடான், சவூதி அரேபியா, ஈரான், தஸகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகள் தமது கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா  அறிவித்துள்ளது.

அத்துடன், இதே காரணங்களுக்காக ரஷியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கமரோஸ் நாடுகளும் சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக்  பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close