ஏமனில் போர் நிறுத்தம் அமலுக்கு வருமா?

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 01:00 pm
will-the-ceasefire-come-into-force-in-yemen

ஏமன் நாட்டில் போர் நிறுத்தம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஒப்பந்தம் மீறப்பட்டு மோதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போரால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். போரின் தீவிரம் காரணமாக மக்கள் உணவு இன்றி தண்ணீர் இன்றி பல துயரங்களை அனுபவித்து வந்தனர். தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஹொடைடா நகரை மீட்பதற்காக சவுதி அரேபியாவுடன் இணைந்து அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், ஜ.நா தூதரின் முயற்சியால் ஸ்வீடனில் இருதரப்பினரிடையே கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஹொடைடா நகரில் ஆங்காங்கே மோதல்கள் ஏற்பட்டதாகவும், அரசு படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close