இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 5.8ஆக பதிவு

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 11:46 am
heavy-earthquake-in-indonesia

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு ஆனது என்று அமெரிக்க புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்தோனேசிய அதிகாரிகளின் ஆய்வில் இந்த நிலநடுக்கும் 6.1 என்று பதிவாகியிருப்பதாகவும், ஒரு சில நொடிகள் பயங்கர அதிர்வுகள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் எரிமலைகளில் ஏற்பட்ட உராய்வுகள் காரணமாக சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் கடந்த சனிக்கிழமை சுனாமி பேரலை தாக்கியது. இந்தக் கோர சம்பவத்தில் 430 பேர் பலியாகினர். அந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது மற்றொரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது.

மேற்கு பப்புவா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்களின் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. அதே சமயம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் எனக் கருத முடியாது என்று இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close