வங்கதேசம் - தேர்தலையொட்டி அதிவேக இணைய சேவைகள் நிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 12:42 pm
internet-services-stopped-in-bangladesh-ahead-of-elections

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 3ஜி, 4ஜி போன்ற அதிவேக இணைய சேவைகள் நிறுத்தி நேற்றிரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 10 மணி நேர இடைவெளிக்குப் பிறகு இன்று காலை அதிவேக இணைய சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

முன்னதாக, வங்கதேசத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நேற்றிரவு 10 மணிக்கு பிறப்பித்த உத்தரவில் அதிவேக இணைய சேவைகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சேவை தொடங்கலாம் இன்று காலை 7.30 மணிக்கு அனைத்து நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

அதிவேக இணைய சேவைகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து வங்கதேச அரசு எந்தவித விளக்கத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பிரதமரும் ஷேக் ஹசீனாவுக்கும், மறைந்த ராணுவ சர்வாதிகாரி முஜிபுர் ரஹ்மானின் மனைவி ஜியாவுர் ராஹ்மானுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close