மனைவியிடம் அறிவிக்காமல் விவாகரத்து செய்யக்கூடாது: சவுதி நீதிமன்றம் தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:12 pm

saudi-men-can-no-longer-divorce-wives-without-informing-them-court-rules

சவுதி அரேபியாவில் பல சமூக மாற்றங்கள் நடந்து வரும் நிலையில்,  இனி மனைவியிடம் அறிவிக்காமல் கணவன் விவாகரத்து செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகிலேயே சவுதி அரேபியா பெண்களுக்கு கடுமையான விதிகளை கொண்ட நாடாக இருந்து வருகிறது. இந்த நாட்டில் பெண்கள் தங்களது ஆண் பாதுகாப்பாளரின் ((Gaurdian) - கணவர்/தந்தை) உரிய அனுமதி இல்லாமல் அவர்களால் திருமணம், விவாகரத்து, பயணம் என சிலவற்றை செய்யவே முடியாது. இவை தற்போது சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது மிக பெரிய தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதுவரை அங்கு மனைவிக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கணவரால் விவாகரத்து  செய்து விட முடியும். இந்த முறையால் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடைக்காமல் போய்விடுகிறது. 

இது போன்ற விதிகளால் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இனி மனைவிக்கு, குறைந்தபட்சம் குறுஞ்செய்தி மூலமாவாது தகவல் கொடுத்துவிட்டு தான் விவாகரத்து பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், 2030க்குள் புது சவுதியை உருவாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி வாகனம் ஓட்ட உரிமை உட்பட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.