பேஸ்புக்கில் தொடரும் தகவல் திருட்டு: வெளியேறும் வாடிக்கையாளர்கள்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 01:39 pm
we-should-be-able-to-take-facebook-to-court

பேஸ்புக்கில் தொடர்ந்து தகவல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்நிறுவனம், பிற நிறுவனங்களுக்கு விற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

பேஸ்புக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்கள் சில நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்த மார்க், இனி இது போன்று நடக்காது என்றும் உத்தரவாதம் கொடுத்தார். 

ஆனால் நெட்ஃபிளிக்‌ஸ், யாஹு போன்ற நிறுவனங்களுக்கு தொடர்ந்து பேஸ்புக் வாடிக்கையாளகர்களின் தகவல்கள் தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது என்று குற்றச்சாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதனால் பலர் தங்களது பேஸ்புக் கணக்குகளை டெலிட் செய்து வருகின்றனர். 

மேலும் சிலர் இதுகுறித்து நீதிமன்றத்தையும் நாடி வருகின்றனர். இந்நிலையில் இனி வாடிக்கையாளர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்வதை கடினமாக்கும் வகையில் பேஸ்புக் சில வேலைகளை செய்து வருகிறது. ஒருவர் உரிய ஆதாரம் இல்லாமல் நீதிமன்றத்தை நாட முடியாது என்ற வகையில் பேஸ்புக் நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது.  அதாவது ஒருவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதை உரிய விளக்கத்துடன் தெரிவிக்க வேண்டும் என்று பேஸ்புக் தரப்பில் வாதமாக முன்வைக்கப்படுகிறது என்று தற்போது தகவல்கள வெளியாகி உள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close