தலிபான் தாக்குதல்: ஆப்கானில் 21 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 02:55 pm
21-police-dead-in-afganistan

ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையினர், 21 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின், மேற்கு பகுதியில் அமைந்துள்ள, பட்கிஸ் மாகாணத்தில் தலிபான் படையினர் நடத்திய தாக்குதலில்,   போலீசார் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 
பக்லான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏழு போலீசார் கொல்லப்பட்டனர்.  அதே பாேல்,  நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள, தக்கார் மாகாணத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த, எட்டு பேர் பலியாகினர்; 23 பேர் காயமடைந்தனர். 
காயமடைந்தோர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close