மீடு இயக்கத்தை கலாய்க்கும் கில்லட் நிறுவனத்தின் விளம்பர படம்!

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 02:03 pm
gillette-metoo-ad-on-toxic-masculinity-gets-praise-and-abuse

"மீடு" இயக்கத்தின் மூலம் ஆண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது" என பொருள்படும்படி வெளியாகியுள்ள கில்லட்  நிறுவனத்தின் விளம்பர படம், உலக அளவில் பெரும் வரவேற்பையும், கண்டனத்தையும் ஒருசேர பெற்றுள்ளது.

சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியுலகுக்கு சொல்வதன் மூலம், இதற்கு காரணமான ஆண்கள் தண்டிக்கப்படவும்,  மேற்கொண்டு பெண்களுக்கு இக்கொடுமை நடைபெறாத வண்ணம் தடுக்கும் நோக்கிலும் மீடு இயக்கம் தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல கவிஞரான வைரமுத்துவின் மீது பாடகி சின்மயி,  சில மாதங்களுக்கு முன் "மீடு" குற்றச்சாட்டு கூறியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஷேவிங் க்ரீம் தயாரிப்பில் பிரபல நிறுவனமான  கில்லட், மீடு இயக்கத்தை கேலி செய்யும் விதத்தில் வெளியிட்டுள்ள விளம்பரம் உலக அளவில் வரவேற்பையும், கண்டனத்தையும் ஒரு சேர பெற்றுள்ளது.

சில பெண்கள் "மீடு" புகார்கள் சொல்வதாக ஆரம்பமாகும் இந்த விளம்பரப் படத்தின் காட்சி,  சினிமாக்கள் மற்றும் தங்குமிடங்களில் அரங்கேறும் பாலியல் பலாத்காரங்களை விவரிக்கும் காட்சிகள், பெண்களுக்காக ஆண்களுக்கு இடையே நடைபெறும் சண்டைகள் என நீள்கிறது.

கூடவே, "பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான புகார்கள், ஆண்மைத்தன்மையை வெளிப்படுவது ஏதோ தவறான செயல் என்பதுபோல் உள்ளன. இதெல்லாம் தேவைதானா?

முன்பெல்லாம் ஆண்கள் தங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தற்போது மீடு மூலம் அவர்களின் ஆண்மைத்தன்மை தானாகவே உறுதி செய்யப்படுகிறது" என வாய்ஸ் ஓவரில் ஒலிக்கும் குரலுடன் அந்த விளம்பரம் நிறைவடைகிறது.

மீடு இயக்கத்தை கிண்டல் செய்யும் விதத்திலும், ஆண்களின் அத்துமீறல்களை அங்கீகரிக்கும் வகையிலும் "நாம் நம்புவோம்" எனும் தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், யுடியூப் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, உலக அளவில் பெரும் வரவேற்பையும், கண்டனத்தையும் சந்தித்து வருகிறது.

"மனிதத்தன்மை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் ஆண் வர்க்கத்துக்கு எதிரானதல்ல. மாறாக பாலியல் சார்ந்த அவர்களின் குணாதிசயங்களை நிரூபிப்பதாகவே அமைத்துள்ளது" என மறைந்த பிரபல உலகத் தலைவர் மார்ட்டின் லூதர் சிங்கின் மகள் பெர்நைஸ் கிங் கூறியுள்ளார்.

அதேசமயம், ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதாரவாளருமான ஜேம்ஸ் உட், இந்த விளம்பரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், "ஆண் வர்க்கத்தையே காமூகர்களாக சித்தரித்துள்ள இந்த விளம்பரத்தை எடுத்துள்ள ஜில்லட் நிறுவனத்தின் தயாரிப்புகளை இனி  புறக்கணிக்க உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close