பர்கர் வாங்க நீண்ட வரிசையில் நின்ற பில் கேட்ஸ்

  சௌந்தரியா   | Last Modified : 18 Jan, 2019 03:01 pm
bill-gates-63-is-spotted-waiting-in-line-to-grab-a-burger

உலக பணக்காரர்களுள் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்காவின் சியட்டலில் உள்ள கடையில் பர்கர் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மைக்ரோசாஃபட் கம்பேனியின் நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். அவரது எளிமையைப் பற்றி எப்போதும் பலரும் புகழ்வது வழக்கம். அந்தவகையில் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சியட்டலில் உள்ள டிக்ஸ் டிரைவ்-இன் எனும் உணவகத்தில் பர்கர், ஃபைரஸ் மற்றும் கோகோ கோலாவை வாங்க நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தை மைக்ரோசாஃப்ட்டின் முன்னாள் ஊழியர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். பின்னர் இணையத்தில் வைரலாகி வருகிறது. பர்கர் பிரியரான பில்கேட்ஸ் இது போன்று வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் முன்னரே பல வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close