ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு?

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 06:21 pm
evm-hacking-demo-at-london

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக, எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவை சேர்ந்த, ‛சைபர் எக்ஸ்பர்ட்’ ஒருவர், இது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். 

பிரிட்டன் தலைநகர் லண்டனில், ‛இந்தியன் அசோசியேசன் பார் ஜர்னலிஸ்ட்’ அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்,  அமெரிக்காவை சேர்ந்த, சைபர் எக்ஸ்பர்ட் ஒருவர், ‛இந்திய ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்’ எனக் கூறி, அதற்கு செயல்முறை விளக்கம் அளித்தார். 

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, கபில் சிபில் பங்கேற்றார். 

எனினும், இது போன்ற குற்றச்சாட்டுகள் பலமுறை எழுப்பப்பட்டுள்ளதாகவும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

மீண்டும் ஓட்டுச் சீட்டு நடைமுறைக்கு திரும்புவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close