சரக்குக் கப்பலில் பயங்கர தீ விபத்து:11 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 11:49 am
11-dead-as-two-ships-with-indian-crew-catch-fire-in-russia

ரஷிய கடல் எல்லைப் பகுதியில் இரு சரக்குக் கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர்  பலியாகினர்.

ரஷியாவிலிருந்து உக்ரைனை நோக்கி இரண்டு சரக்கு கப்பல்கள் திங்கள்கிழமை நள்ளிரவு பயணித்து கொண்டிருந்தன. அதில், ஒரு கப்பலில் இந்தியப் பணியாளர்கள் 8 பேர் உள்பட மொத்தம் 17 பேர் இருந்தனர். மற்றொரு கப்பலில் 7 இந்தியர்கள் உட்பட 15 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இரு கப்பல்களில் ஒன்றின் கொள்கலனில் திரவ இயற்கை எரிவாயு நிரப்பப்பட்டிருந்தது. ரஷிய கடல் எல்லைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, ஒரு கப்பலின் கொள்கலனில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அருகிலிருந்த கப்பலுக்கும் தீ பரவியது.

இத்தீயில் சிக்கி 11 கப்பல் பணியாளர்கள் இதுவரை இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன 9 பேரை தேடும்படி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close