பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நெஞ்சு வலி

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 02:09 pm
nawaz-sharif-s-condition-is-very-serious

ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள, அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நவாஸ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

எனினும், நவாஸின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள, அவரது மருத்துவர், நவாஸை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஏற்கனவே, இதய பாதிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவரது மருத்துவர், தற்போதைய சூழலில், சிறையில் வைத்து அவருக்கு மருத்துவம் பார்க்கும் நிலையில் அவரது உடல் நிலை இல்லை எனவும் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close