அய்யோ... இது என்ன கொடுமை...சிறுமிகளின் மார்பகங்களை சிதைக்கும் தாய்மார்கள்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 05:22 pm
ironing-breasts-of-young-girls-spreads-in-uk


வளர் இளம் பெண்களின் மார்பகங்கள் வேகமாக வளர்வதை தடுக்க, அவர்களின் மார்பகங்களில் சூடான கல்லை வைத்து தேய்க்கும் கொடூர பழக்கம், பிரிட்டனில் அதிகரித்து வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில், சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் தடுக்கவும், ஆண்களின் காமப் பார்வை அவர்கள் மீது படாமல்  இருக்கவும், தங்கள் மகள்களுக்கு, அவர்களின் தாய்மார்களே, மார்பகங்களை சிதைக்கும் கொடூர பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 

உலகளாவிய பெண்கள் நல அமைப்புகள், உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் நலனுக்காக செயல்படும் பல்வேறு அமைப்புகள் போன்றவை இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது போன்ற செயல்பாடுகளை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.இந்த நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான வன்முறையாக, ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படிப்பறிவு அதிகம் உள்ளோர் வசிக்கும், ஒரு காலத்தில் உலக நாடுகளை கட்டி ஆண்ட நாடான, பிரிட்டனிலும் இந்த கொடூர பழக்கம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து, பிரிட்டனை சேர்ந்த பெண்கள் நல அமைப்பினர் கூறியதாவது: ‛‛இந்த காலத்தில் சிறுமிகள் மிகவும் சிறு வயதிலேயே பூப்படைந்துவிடுகின்றனர். அவர்களின் மார்பக வளர்ச்சி வேகமாகவும், அதீதமாகவும் உள்ளது.

இதனால், காமப் பசியுடன் அலையும் ஆண்களின் பார்வையில் சிக்கி, அவர்கள் கற்பை இழக்க நேரிடுகிறது. எனவே, குறிப்பிட்ட வயது வரை, வளர் இளம் பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சியை தடுக்க, அவர்களின் மார்பகங்களில் சூடு வைக்கப்படுகிறது. 

அதாவது, சூடான கற்கள் அல்லது இரும்பு பொருட்களை வைத்து, துணிகள் உதவியுடன், சிறுமிகளின் மார்பகங்களில் மசாஜ் செய்கின்றனர். இதனால், மார்பக திசுக்கள் அழிந்து, அதன் வளர்ச்சி வேகம் குறைக்கப்படுகிறது.

இந்த கொடுமையை, சிறுமியரின் தாய்மார்கள், அத்தை, சித்தி, பெரியம்மா, பாட்டி உள்ளிட்ட உறவினரே செய்கின்றனர்.
முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் காணப்பட்ட இந்த கொடூர பழக்கம், தற்போது, பிரிட்டனிலும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. 

இது போன்ற நடவடிக்கைகளால், பெண் குழந்தைகளின் மார்பக வளர்ச்சி தடைபடும். எதிர்காலங்களில், அவர்கள் தாய் பால் தருவதில் சிக்கல் ஏற்படும். மார்பக புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. படிப்பறிவு அதிகம் உள்ள லண்டனிலேயே, இது போன்ற கொடூர பழக்கம் அதிகரித்துள்ளது, அச்சமும், வேதனையும் தரக்கூடியதாக உள்ளது.

இது குறித்து, யாரும் போலீசில் புகார் அளிக்க முன் வராததால், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது’’ என அவர்கள் கூறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close