வாட்ஸ்அப்பின் அட்டகாசமான புதிய வசதியை பார்த்தீர்களா?

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 05:56 pm
whatsapp-s-new-pip-feature

வாட்ஸ்அப் நிறுவனம் தனது அடுத்த புதிய அப்டேட்டாக 'பிக்சர் இன் பிக்சர்' வசதியை 'வாட்ஸ்அப் வெப்' சேவைக்கும் கொண்டு வந்துள்ளது. வீடியோ லிங்குகளை பகிரும் போது, அதை தனி இணையதளம் மூலம் திறக்காமல், வாட்ஸ்அப்பிலேயே பார்க்க முடியும்.

உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் சேட்டிங் ஆப் வாட்ஸ்அப், புதிய அட்டகாசமான ஒரு அப்டேட்டை சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி வாட்ஸ்அப்பில் நண்பர்கள் அனுப்பும் வீடியோக்களை பார்க்க யூடியூப் போன்ற மற்றொரு ஆப்பை திறக்க வேண்டியதில்லை. யூடியூப், பேஸ்புக் போன்ற பிரபல தளங்களின் வீடியோ லிங்குகளை வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்தால், அது வாட்ஸ்அப்பினுள்ளேயே சிறிய திரையில் பிளே ஆகும். இதனால், வீடியோ அனுப்பியவருடன் சேட்டிங் செய்துகொண்டே வீடியோக்களை பார்க்க முடியும். 

தற்போது இந்த அப்டேட்டை, 'வாட்ஸ்அப் வெப்' சேவைக்கும் அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. கணினி, லேப்டாப் உள்ளிட்ட ப்ரவுசர்களில் இனி வாட்ஸ்அப் வெப் சேவையை பயன்படுத்தும் போது, புதிதாக யூடியூபை திறக்காமல், வாட்ஸ்அப் விண்டோவிலேயே வீடியோக்களை பார்க்கலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close