‛நைட் ஷிப்ட்’ வேலையா? நடுங்க வைக்கும் அதிர்ச்சி ‛ரிப்போர்ட்’

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 06:09 pm
working-in-night-shifts-will-leads-to-death

ஐ.டி., கால்சென்டர் மட்டுமின்றி, பல்வேறு துறை சார் எம்.என்.சி.,க்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிலும், இரவுப் பணி என்பது மிகவும் சகஜமான ஒன்றாகி விட்டது. 

ஆண்டு தோறும், கோடிக்கணக்கான பட்டதாரிகள், கல்லுாரி, பல்கலைகளிலிருந்து பட்டம் பெற்று வேலைக்கு தயாராகும் போது, போட்டி நிறைந்த இந்த உலகில்,அவர்கள், தங்களுக்கு கிடைக்கும் முதல் பணி வாய்ப்பை நழுவ விட விரும்புவதில்லை.

இதையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பல தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து, இரவு, பகல் என, 24 மணி நேரமும் நிறுவனம் இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கின்றன.

படித்தவுடன் வேலை என்ற ‛அல்வா’ இளைஞர்களின் கண் முன் தெரிவதால், அவர்கள் வேறு பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கவும் நேரம் இல்லாமல் உடனடியாக பணியில் சேரும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஒரு சிலர், இந்த ஷிப்ட் பணி நடைமுறையை விரும்பி ஏற்றாலும், பலரின் குடும்ப சூழலும், நிதி தேவையுமே, அவர்கள் இதுபோன்ற பணி வாய்ப்பை பயன்படுத்த வேண்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில்,  இரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு வரும் பிரச்னைகள் குறித்து, ஹாங்காங் பல்கலைகழகத்தை சேர்ந்த, ஆய்வாளர், டாக்டர் சியு வாய் சோய் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

‛‛ இரவு பணியில் ஈடுபடும் குறிப்பிட்ட நபர்களையும், அதே பணியை பகல் நேரத்தில் செய்யும் நபர்களையும் வைத்து ஆய்வு மேற்கொண்டோம். இரு தரப்பினரின் உடல் உறுப்புகள் மற்றும் டி.என்.ஏ.,க்களின் செயல்பாட்டில் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருந்தது. 

குறிப்பாக, இரவுப் பணிக்கு செல்வாேரின், மரபணுக்களில் காணப்படும் டி.என்.ஏ.,க்களில் சிதைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் விரைவில் முதுமை தன்மை அடைகின்றனர்.

அது மட்டுமின்றி, இரவு நேரத்தில் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் உறுப்புகளான, கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, ரத்தம் சரியாக சுத்திகரிக்கப்படாததால், அது இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் காரணமாக, மரபியல் சார்ந்த நோய்கள், இதய நோய், உள்ளிட்ட அனைத்து வகை நோய் தாக்கமும் மிக எளிதாகவும், சீக்கிரமாகவும் இவர்களை தாக்க வாய்ப்புள்ளது.

இரவு, 9 மணிக்கு மேல் சாப்பிடுவது, 10 - 11 மணிக்கு மேல் உறங்காமல் விழித்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்தால், அவர்களுக்கு எந்த நேரத்திலும் மரணம் நிகழலாம். இரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் அந்த இரவே கூட அவர்களின் கடைசி இரவாக இருக்கவும் வாய்ப்புள்ளது’’ என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close