அடடே..! மனித மூளையின் கட்டளைக்கு கட்டுப்படும் எலிகள்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 01:59 pm
scientists-control-rats-using-a-human-brain

மனித மூளையையும், எலிகளின் மூளையையும் ஒருங்கிணைத்து, மனித மூளையின் கட்டளைக்கு ஏற்ப, எலிகளை செயல்பட வைக்கும் ஆய்வில், சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

சீனாவின், செஜியாங் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், மனிதன் மற்றும் விலங்குகளின் மூளை செயல்பாடுகளின் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நீண்ட காலமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மனித மூளை பிறப்பிக்கும் கட்டளைகளையை ஏற்கும் எலியின் மூளை, அதை அப்படியே செயல்படுத்தும்படி கட்டளையிட வைக்கும் வகையில், விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

இதற்காக, 10 எலிகள் பயன்படுத்தப்பட்டன. எலிகளின் மூளையில் சிறிய எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டன. எலியை பரிசோதனைக்கு உட்படுத்தும் நபரின் மூளை, கம்ப்யூட்டருடன் தாெடர்பில் வைக்கப்பட்டது. 

இதையடுத்து, மனித மூளை பிறப்பித்த கட்டளைகள், எலிகளின் மூளை அதிர்வலைக்கு ஏற்பட மாற்றப்பட்டு, கம்ப்யூட்டரிலிருந்து, எலிகளின் மூளைக்கு நேரடியாக மாற்றப்பட்டன. 

இந்த கட்டளைகளை ஏற்ற எலிகள், அவற்றிற்கு ஏற்றார் போல் செயல்பட்டன. எலிகளை, வலப்புறம், இடப்புறம் திரும்பி செல்ல வைத்து, இந்த சாேதனை நடத்தப்பட்டது. 

‛‛விரைவில், அனைத்து வகை கட்டளையையும் எலிகள் ஏற்கும் வகையில் சாேதனை நடத்தப்பட்டு, அதில் வெற்றி காண்போம்’’ என, விஞ்ஞானிகள் கூறினர். 

பூகம்பம் ஏற்படும் காலங்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போர் குறித்த தகவல்களை விரைந்து பெற, இவ்வகை எலிகளை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close