ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டனர்: டிரம்ப் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:50 pm
isis-caliphate-has-been-decimated-donald-trump

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அமெரிக்க கூட்டு படையால் முழுவதும்  ஒடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொலான்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில், அதிபர் டிரம்ப் பேசியதாவது: ‛‛ உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த, இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கைப்பற்றிய பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், அமெரிக்க கூட்டு படைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி. இந்த அறிவிப்பு, வெகு விரைவில், பத்திரிக்கையாளர்கள் மத்தியில், பொது வெளியில் அறிவிக்கப்படும். 

நிச்சயம் இது ஒரு பெரிய வெற்றிதான் ஆயினும், பயங்கரவாதிகள் மீண்டும் உருவெடுக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். 

நுாற்றுக் கணக்கான பயங்கரவாத தலைவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது, பயங்கரவாதத்திற்கு எதிராக, உலக நாடுகள் எடுத்த மிகப் பெரிய நடவடிக்கையின் வெற்றியாகும்’’ என அவர் பேசினார். 

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டது குறித்து, அதிபர் டிரம்ப், விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close