ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் சிக்கிய 23 பேரில் கதி என்ன..?

  டேவிட்   | Last Modified : 15 Feb, 2019 10:53 am
23-feared-dead-in-zimbabwe-gold-mine-flood

ஜிம்பாப்வே கடோமா நகரில் உள்ள இரண்டு சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் சிக்கிக்கொண்ட 23 தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தூரத்தில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள இரண்டு சுரங்கங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி உள்ளன. இங்கு சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் பலத்த மழை காரணமாக, சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை ஒன்று கடந்த 12ஆம் தேதி இரவு திடீரென உடைந்தது. இந்த வெள்ளத்தினால் இரண்டு சுரங்கங்களிலும் தண்ணீர் நிறைந்தது. இதில் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.  மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடுமோ என சந்தேகமாக இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close