அதிபர் தேர்தலையொட்டி நைஜீரியாவில் வெறிச்செயல்: 66 பேர் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 04:36 pm
66-killed-by-gunmen-in-nigeria-presidential-elections-postponed

நைஜீரியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு கடுனா என்ற பகுதியில் நடைபெற்ற கொடூர தாக்குதலில், 66 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் கடுனா பகுதியில் உள்ள கிராமங்களில், திடீரென மர்ம நபர்கள் புகுந்து, துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் 66 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 22 பேர் குழந்தைகள் என்றும் 12 பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

தாக்குதலுக்கான காரணம் குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை, என அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில் ஒரு சிலரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், நைஜீரிய தலைமை தேர்தல் ஆணையம், அதிபர் தேர்தலை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close