இந்தியாவுக்கு நிபந்தனைகளற்ற உதவிகள்: இஸ்ரேல்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 05:01 pm
unconditional-limitless-support-to-curb-terrorism-israel-to-india

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு, நிபந்தனைகளற்ற, அளவில்லாத உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக, நட்பு நாடான இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. முக்கியமாக, தீவிரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல், இந்தியாவுக்கு எண்ணற்ற உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ரான் மால்கா, "இந்தியாவுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி, உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும்; முக்கியமாக தீவிரவாதத்தை ஒழிக்க அளவில்லாத உதவிகளை செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளை நுணுக்கமாக குறிவைத்து தாக்குவதிலும், உளவு பார்ப்பதிலும், சர்வதேச அளவில் பெரிதும் போற்றப்படும் இஸ்ரேல் ராணுவம், தொழில்நுட்ப ரீதியாகவும், உளவுத்துறை மூலமாகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இந்தியாவுக்கு எண்ணற்ற உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும், அவர் கூறினார்.

இதுகுறித்து மால்கா பேசியபோது, "இந்தியா தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்களது நெருங்கிய நண்பரான இந்தியா, தீவிரவாதத்துக்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்ள உதவிகள் செய்ய வேண்டும். ஏனென்றால், தீவிரவாதம் என்பது இந்தியா, இஸ்ரேலுக்கு மட்டும் உண்டான பிரச்சினை இல்லை. உலகத்துக்கே உள்ள பிரச்சனைதான்" என்று கூறினார்.

இஸ்ரேல் ராணுவத்தின் முன்னால் கர்னலான மால்கா, "சமீபத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேசியபோது, அவர், இந்தியா,நம்முடைய மிக முக்கியமான ஒரு நட்பு நாடாகும். இந்தியாவுடனான நம்முடைய உறவை மேலும் வளர்க்க வேண்டும். இந்தியாவுடன் நமது தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு உதவுவது, உலக அமைதிக்கு வழி வகுக்கும் என்று என்னிடம் கூறினார்" என்று டாக்டர் ரான் மால்கா தெரிவித்தார்.  டாக்டர் ரான் மால்கா இஸ்ரேல் நாட்டின் மிகப் பிரபலம் வாய்ந்த மொசாத் என்று அழைக்கப்படும் உளவு அமைப்பில் உயர் அதிகாரியாகப் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close