உலகின் மிக ஆபத்தான ஹேக்கர்கள் யார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 06:54 pm
russian-hackers-take-just-19-minutes-to-infiltrate-your-system

சர்வதேச அளவில் இணைய பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக மாறிவிட்ட நிலையில், உலகிலேயே மிக ஆபத்தானவர்கள், ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் தான் என, ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் இணையதளம் மிக அடிப்படையான ஒரு விஷயமாகிவிட்டது. அதேநேரம், அதை தவறாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடியில் துவங்கி, தற்போது தேர்தலையே தாங்கள் விரும்பியபடி மாற்றும் சக்தி ஹேக்கர்களுக்கு கிடைத்துள்ளது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹேக்கர்கள் செய்த பல்வேறு குளறுபடிகள், உலகுக்கே அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த க்ரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், உலகின் முக்கிய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹேக்கர்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

ஹேக்கர்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதிக்கும் நாடுகள் பட்டியலில், ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. க்ரவுட்ஸ்ட்ரைக் அமெரிக்க நிறுவனம் என்பதால், இந்த ஆய்வில் அமெரிக்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த ஆய்வின்படி, ரஷ்ய ஹேக்கர்கள் மிகவும் வல்லமை படைத்தவர்கள் என தெரியவந்துள்ளது. வெறும், 19 நிமிடங்களில் ஒரு இணையத்தை முடிக்கி, அதில் ரஷ்ய ஹேக்கர்களால் புகுந்து விடமுடியுமாம்.

இணைய பாதுகாப்பை உடைக்க ஹேக்கர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம், 'ப்ரேக்அவுட் டைம்' என குறிக்கப்படுகிறது. வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்களின் ப்ரேக்அவுட் டைம், 2 மணி நேரம் 20 நிமிடங்களாம்.

மூன்றாவது இடத்தில் உள்ள சீன ஹேக்கர்கள், 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், அதைத்தொடர்ந்து ஈரானை சேர்ந்த ஹேக்கர்கள் சுமார் 5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்வதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close