ஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்!

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 08:10 pm
7-5-richter-earthquake-in-ecuador-peru-border

தென்னமெரிக்க நாடான ஈகுவேடாரின் கிழக்குப் பகுதியில், 7.5 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. பெரூ, கொலம்பியா ஆகிய அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

ஈகுவேடார் நாட்டின் கிழக்குப் பகுதியில், பெரூ நாட்டின் எல்லைக்கு அருகே, இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. ஈகுவேடாரின் பலோரா பகுதியில் இருந்து 71 மைல்கள் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது.

அதிகாலை 5.17 மணியளவில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 82 மைல்கள் ஆழத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 82 மைல்கள் ஆழம் என்பதால், இது நடுநிலை நிலநடுக்கம் என்றும், இதனால் பெரிதளவு ஆபத்து ஏற்படாது என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

"மகாஸ் பகுதியின் அருகே ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், பெரிய அளவில் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை, என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன" என அந்நாட்டின் அதிபர் லெனின் மொரேனோ தெரிவித்தார். மேலும், நிலநடுக்கத்தின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உணரப்பட்டதால், அவசர சேவைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில், உள்ள பெரு - சிலி அகழியில் அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கை. கடந்த நூறு ஆண்டுகளில் இதுபோல 15 நிலநடுக்கங்கள் ஏற்படுள்ளதாகவும், அவற்றிலேயே, இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் தான் மிக ஆழமானது, என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close