மிகப்பெரிய 'நியூட்டெல்லா' தொழிற்சாலை மூடல்! தரத்தில் குறைபாடு

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 04:28 pm
nutella-closes-biggest-factory-due-to-quality-defect

சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமான நியூட்டெல்லா, தரத்தில் குறைபாடு ஏற்பட்டதை, தனது உட்கட்ட ஆய்வில் தெரிந்துகொண்ட பின், பிரான்ஸில் உள்ள தனது மிகப்பெரிய தொழிற்சாலையை தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளது. 

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பிரபலமாகி வரும் நியூட்டெல்லா என்ற சாக்லேட் ப்ரெட் ஸ்ப்ரெட்டை தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரான்சின் வில்லர்ஸ்- எகாலஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் தான், உலகிலேயே அதிக அளவில் நியூட்டெல்லா தயாரிக்கப்படுகிறது. 

உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனமான இத்தாலியை சேர்ந்த பெரேரோவின் கிளை நிறுவனம் தான் நியூட்டெல்லா. இதில் சமீபத்தில் நடத்தப்பட்ட தர பரிசோதனையில், பாதி தயாரிக்கப்பட்ட நிலையிலேயே, தங்களது தர விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவாறு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்ய, அதை முழுவதுமாக தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளது பெரேரோ நிறுவனம்.

"பொருட்களில் உள்ள தர குறைபாடால் அவை எங்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. அதனால், தொழிற்சாலை பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். இது முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close