ஆராேக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் எது தெரியுமா? 

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 04:32 pm
healthiest-country-index-spain-gets-top-rank

உலக நாடுகளில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு மேற்கொண்ட, தனியார் நிறுவனம், அது சேகரித்த தகவல்களின் அடிப்படையில், ஆரோக்கியமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. 

உலக நாடுகள், தங்கள் நாட்டில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடும் தொகை, மக்கள், தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறை, உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 

புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு முடிவில், இந்த ஆண்டு, ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில், ஸ்பெயின் முதலிடம் பிடித்துள்ளது. இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல், 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. 

நம் அண்டை நாடான சீனா, 52வது இடத்தையும், வங்கதேசம், 91வது இடத்தையும், நேபாளம், 110வது இடத்தையும் பிடித்துள்ளன. 169 நாடுகள் பட்டியலில், இந்தியா, 120வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close